தமிழகம்

தவற விட்ட நகையை திருப்பி ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

ஆட்டோவில் தவற விட்ட நகையை திருப்பி ஒப்படைத்த டிரைவரை காவல் ஆணையர் பாராட்டினார்.

பழைய வண்ணாரப்பேட்டை கெனால் தெருவை சேர்ந்தவர் நாகராணி. இவர் 2 நாட்களுக்கு முன் அடையாறில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார். பின்னர், பேருந்து மூலம் அடையாறிலிருந்து தங்க சாலைக்கு வந்த அவர், அங்கிருந்து ஆட்டோ மூலம் வீடு திரும்பினார். அப்போது அவரது கைப்பையில் வைத்திருந்த 12 சவரன் நகை காணாமல் போனது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸில் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கொருக்குபேட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் நகைப்பை கிடந்ததாகவும், அதில் 12 சவரன் நகை இருந்ததாகவும் கூறி அதை ஆய்வாளர் ஜவகரிடம் ஒப்படைத்தார். அவர் அதை நாகராணியிடம் கொடுத்தார்.

ஆட்டோவில் தவறிய நகையை நேர்மையாக போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் பன்னீர் செல்வத்துக்கு காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் பாராட்டு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT