தமிழகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சென்னையை சேர்ந்தவர் கைது

செய்திப்பிரிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சென்னையைச் சேர்ந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம், பீர்மேடு காவல்நிலைய தொலைபேசி எண்ணுக்கு கடந்த 31-ம் தேதி அலைபேசியில் பேசிய நபர், சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தாண்டு நள்ளிரவில் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். இதையடுத்து, சபரிமலை கோயில் பகுதியில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் தொலை பேசியில் பேசியவர் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப் பையா(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து பீர்மேடு எஸ்.ஐ. ஜோஸ்வின்ஜார்ஜ் தலைமை யிலான போலீஸார் சென்னை சென்று சுப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT