ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மெரினா கடற்கரை யில் நடந்த போராட்டத்தை கலைக்க கடந்த 23-ம் தேதி காவல் துறையினர் தடியடி நடத்தினர். அப்போது நடுக்குப்பம் பகுதியில் வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில் நடுக்குப்பத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க தடியடி நடத்திய காவல் துறையினர் நடுக்குப்பம் பகுதியில் வீடுகள் மீதும், மக்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள் ளனர். இதில் பலர் காய மடைந்ததோடு, உடைமை களையும் இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். காவல் துறையினரே ஆட்டோக்களுக்கு தீ வைக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகி றார். இது முழுக்க முழுக்க உளவுத் துறையின் தோல்வியா கும். வன்முறையில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ வைத்து எரிக்கப்பட்ட மீன் சந்தையை அரசே கட்டித் தர வேண்டும். நடுக்குப்பம் பகுதி மக்களுக்கு நீதி கேட்டு வரும் 30-ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.