தமிழகம்

பால் விலை உயர்வு: டீ, காபி, இனிப்பு வகைகள் விலை உயரும் அபாயம்

கி.ஜெயப்பிரகாஷ்

ஆவின் பால் விலை உயர்வால் டீ, காபி மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்க துணைச் செயலாளர் சுகுமாறனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் டீக்கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் எங்கள் சங்கத்தின்கீழ் மொத்தம் 3,500 கடைகள் உள்ளன. வர்த்தக காஸ் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங் களின் பால் விலையும் அடிக்கடி உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசும் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தியுள்ளது.

நவம்பர் 4-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் எங்கள் சங்கத்தின் மாநாடு நடக்கிறது. அதன்பிறகு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துதான் இறுதி முடிவு எடுப்போம்.

இவ்வாறு சுகுமாறன் கூறினார்.

இனிப்பு தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘மைசூர் பாகு, லட்டு, பாதுஷா, மில்க் ஸ்வீட், பால்கோவா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இனிப்புகளை தயாரிக்கிறோம். இதில், 80 சதவீத இனிப்புகளுக்கு பால் மற்றும் பால் பொருளான நெய்தான் மூலப்பொருளாக இருக்கிறது. ஏற்கெனவே, உற்பத்தி செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரு கிறது. இப்போது, பால் விலையும் உயர்த்தப்பட் டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படும். செலவை ஈடுசெய்ய முடியாதபட்சத்தில் மக்களை பாதிக்காத வகையில் கணிசமான அளவுக்கு விலை உயர்வு இருக்கும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT