தமிழகம்

ஈழத் தமிழர்களுக்காக குரல்: கேமரூனுக்கு வாசன் பாராட்டு

செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில், ஈழத் தமிழர்களுக்காக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத் தக்கது என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வாசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேம்ரூன் கோரியிருப்பது வரவேற்கத்தக்கது.

இலங்கைக்கு சல்மான் குர்ஷித் சென்றதன் அவசியம் புரிகிறது. அவர் அங்கு நிச்சயம் மனித உரிமை மீறல்கள் குறித்து நிச்சயமாக பேசியிருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT