உலக பாலியல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வரும் செப்டம்பர் 2, 3, 4-ம் தேதிகளில் வடபழனியில் உள்ள காமராஜ் பல்நோக்கு மருத்துவமனையில் ஆண்களுக்கான பாலியல் சிறப்புக் கண்காட்சி, பாலியல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் ஆகியவை நடைபெற உள்ளன.
இது தொடர்பாக வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையினை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்தப் பேட்டி:
சர்வதேச பாலியல் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 4-ம் தேதி உலக பாலியல் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக பாலியல் விழிப்புணர்வு தினம், சென்னை வடபழனியில் புதிதாக திறக்கப்படும் காமராஜ் பல்நோக்கு மருத்துவமனையில் கொண்டாடப்படுகிறது. காமராஜ் பல்நோக்கு மருத்துவமனையை வசந்த் நிறுவன குழுமத்தின் தலைவரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.வசந்தகுமார் செப்டம்பர் 2-ம் தேதி காலை 9 மணிக்கு திறந்து வைத்து, ஆண்களுக்கான பாலியல் சிறப்புக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
அனைத்து சந்தேகங்களுக்கும்
இந்தக் கண்காட்சியில் ஆண்மைக் குறைவு, பாலுறவு நோய்கள், குழந்தையின்மை பிரச் சினை, விவாகரத்து, தம்பதியர் நலம், மது மற்றும் நீரிழிவு நோயால் ஏற்படும் ஆண்மைக் குறைபாடு, நவீன சிகிச்சை முறைகள் உட்பட அறிவியல் பூர்வமான விளக்கங்கள் சிறந்த பாலியல் வல்லுநர்களால் தரப்பட உள்ளன. செக்ஸ் தொடர் பான அனைத்து சந்தேகங் களுக்கும் கண்காட்சியில் விடை கிடைக்கும்.
பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இளம் பருவ ஆண்களும், பெண்களும் பல்வேறு வகையான குழப்பங்களோடும், தடுமாற்றங்களோடும் சர்ச்சை களோடும் தங்களது வாழ்க் கையை எதிர்கொள்கின்றனர். மனதி லும், உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மனக்கலக்கமும் ஏற்படுகிறது. நண்பர்கள் அளிக்கின்ற அழுத்தம் மற்றும் சமூக கட்டுப்பாடுகள் போன்றவைகளும் இந்த தாக்கத்தை அதிகரிக்கின்றன.
மனிதச்சங்கிலி
பெற்றோர், ஆசிரியர், இளம் பருவத்தினர் பாலியல் பற்றி வெளிப்படையாக பேசவோ, விவாதிக்கவோ, விளக்கம் அளிக் கவோ தயாராக இல்லை. அவர் கள் அதை தர்ம சங்கடமாகவே நினைக்கின்றனர். இந்த நிலையை மாற்ற உலக பாலியல் தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக மனிதச்சங்கிலி நிகழ்ச்சியும், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்