வேட்டி அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ஜனவரி முதல் வாரத்தை 'ராம்ராஜ் வேட்டி வாரம்' என பிரபலப்படுத்தி சலுகை விலையில் ரூ.100-க்கு வேட்டிகளை விற்று வருகிறது ராம்ராஜ் நிறுவனம்.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நெசவாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், வேட்டி நமது பண்பாட்டின் அடையாளம், கலாச்சார சின்னம் என்பதை இளைய தலைமுறைக்கு உணர்த்தவும் ஜனவரி முதல் வாரத்தை ‘ராம்ராஜ் வேட்டி வாரம்' என கூறி ராம்ராஜ் நிறுவனம் பிரபலப்படுத்தி வருகிறது.
ராம்ராஜ் நிறுவனத்தின் தரமான வேட்டிகள் குறைந்த ரூ.100 விலையில் இந்த வாரம் முழுவதும் கிடைக்கும். ராம்ராஜ் நிறுவனத்தின் அனைத்து டீலர்களிடமும், ஷோரூம்களிலும் ரூ.100-க்கு வேட்டிகள் கிடைக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி வேட்டி வாரத்தை கொண்டாடி நூற்றாண் டுகள் கடந்த நமது கலாச்சாரம் வளர துணை நிற்க வேண்டும்.