தமிழகம்

அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள்: கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு - பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் இருந்து மீட்கப் பட்ட 4 ஐம்பொன் சிலைகள் கும்ப கோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன. அவற்றை சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2006-2008ம் ஆண்டுகளில் அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜப் பெருமாள் கோயில், புரந்தான் கைலாசநாதர் கோயி லில் 28 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.

இந்த சிலைகள் வெளிநாடு களுக்கு கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. சிலைகளைக் கடத்தி யதாக, அமெரிக்காவில் சிலைகள் அருங்காட்சியகம் நடத்திவரும் இந்தியரான சுபாஷ் சந்திர கபூர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அவரிடம், புரந்தான் கோயிலுக்கு உரிய விநாயகர், மாணிக்கவாசகர் சிலைகளை அமெரிக்க அதிபர் ஒப்படைத்தார். பின்னர், இச்சிலை களை மத்திய அரசு அதிகாரிகள், தமிழக சிலை கடத்தல் தடுப் புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்ப டைத்தனர். அதேபோல, கடந்த வாரம் சுத்தமல்லி கோயிலுக்கு உரிய பூதேவி, சக்கரத்தாழ்வார் சிலைகளை சிலை கடத்தல் தடுப் புப் பிரிவு போலீஸார் மீட்டனர்.

மீட்கப்பட்ட 4 ஐம்பொன் சிலை களை நேற்று முன்தினம் அந்தந்த கோயிலுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, பட்டாச்சாரியார், குருக்கள் மற்றும் பொதுமக்களிடம் நேற்று முன்தினம் காண்பிக்கப்பட்டு, அந்த சிலைகள் இரு கோயில்களுக்கு உரியவைதான் என்று உறுதிப்படுத் தப்பட்டது. இதையடுத்து, மீட்கப் பட்ட 4 சிலைகளையும் கும்ப கோணம் கூடுதல் தலைமைக் குற்ற வியல் நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஒப்படைத்தனர்.

சிலைகளின் உயரம், எடை ஆகியவற்றை அளவீடு செய்த நீதிபதி பாஸ்கரன், இவ்வழக்கு முடியும்வரை, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 4 சிலைகளையும் பாதுகாப்பாக வைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, 4 சிலைகளையும் பாதுகாப்பாக எடுத்துச் சென்ற போலீஸார், சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி அசோக் நடராஜ் கூறும்போது, “அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 கோயில்களில் 28 சிலைகள் காணாமல் போய்விட்டன. இவற் றில் 7 சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன. மீதமுள்ள சிலைக ளும் அமெரிக்காவில் உள்ள கபூரின் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை மீட்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT