மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜி.எஸ்.டி.) எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார்.
கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது:
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்கு தல் தொடர்பாக கண்டனம் தெரி வித்த திமுக உள்ளிட்ட அனைத் துக் கட்சிகளுக்கும் நன்றி. தமிழ கத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க, கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத் துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இது தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் உறுதி அளித் துள்ளார். போதுமான காவலர்கள் இல்லாததால், வேலைப் பளு காரணமாக காவல் துறையினர் தவிக்கின்றனர். காலியிடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும்.
பாஜகவுக்கு எதிர்க்கட்சியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்று அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். அரசியல் ரீதியான தாக்குதல்களுக்கு, விவாதங் களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேசமயம், மத வாதத்தை முன்னிறுத்திய தீவிர வாதம் என்பது நாட்டுக்கே ஆபத்தானது.
வன்முறையை அடிப்படையா கக் கொண்ட அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள். மார்க்சிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதல், எங்களை முன்பைவிட வேகமாகச் செயல்படவைக்கும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். எனவே இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
தற்போது திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து, மக் கள் பிரச்சினைகளுக்காகப் போராடுகிறோம். கூட்டணி தொடர்பாக தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்வோம்.
டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார்.
காவல் ஆணையரிடம் மனு
முன்னதாக மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கண்டு பிடிக்கவும் கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் டி.கே.ரங்கராஜன் எம்.பி. மனு அளித்தார்.