நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும் என நகர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு, தகவல் ஒலிபரப் புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை கொடிசியா வளாகத் தில் நடைபெற்று வரும் சர்வதேச கயிறு கண்காட்சியில், விற்போர், வாங்குவோர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
முதலீட்டுக்கு ஏற்ப லாபம் இல்லாதது, வேளாண் விளை பொருள்களை விற்பனைக்கு எடுத் துச் செல்வதில் அதிகப்படியான விதிமுறைகள் இருப்பது போன்ற காரணங்களால் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நகரங்களுக்கு புலம் பெயரும் மக்களின் எண்ணிக்கையும் அதி கரித்துள்ளது.
விவசாயத்தில் உள்ள பிரச்சி னைகளைக் கண்டறிந்து அவற்றுக் குத் தீர்வு காணும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட் டு வருகிறது. முக்கியமாக, உரங் களின் விலை முதல்முறையாக குறைக்கப்பட்டுள்ளது. 120 கோடி மக்களின் உணவுத் தேவைக்கும் இறக்குமதியை நம்பியிருக்க முடியாது.
எனவே உணவு உற்பத் தியைப் பெருக்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். இதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந் துரையை படித்து அதை அமல் படுத்த பரிசீலித்து வருகிறோம்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே 23 சதவீதம் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருந்தாலும் முழுமையான பயிர் காப்பீடுத் தொகையை வழங் குகிறோம்.
விவசாயப் பயிர் காப்பீடுக்காக மட்டும் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இதன்படி எதிர்பார்த்த விளைச் சல் இல்லாவிட்டாலும் காப்பீடு பெற முடியும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந் தாலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை குறைப்பதில்லை என்றார்.
‘விவாதிக்கலாம்’
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
அருணாச் சல பிரதேசம், காஷ் மீர் விவகா ரங்களை காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் எழுப்பினா லும், அது தொடர்பாக விவா திப்பதற்கு எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை.
சரக்கு, சேவை வரியை அமல் படுத்தும் விவகாரம், காங்கிரஸ் ஆட்சியின்போது நிதி அமைச்சர்க ளாக இருந்த பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் ஆகியோர் இருந்தபோதே முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து அமலுக்கு வராமல் இழுபறியாக உள்ளது.
இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தா லும், நடப்பு கூட்டத் தொடரில் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.