இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்குகளில் 100 சதவீதம் பணமில்லா பரிவர்த் தனை செய்யும் திட்டம் 10 நாட்களுக்குள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வாகன ஓட்டி களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1,000-ம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ம் தேதி அறி வித்தது. இதையடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை குறைந்த அளவே அச்சடித்து வெளி யிட்டுள்ளது. இதன் மூலம் பண மில்லா பரிவர்த்தனையை ஊக்கப் படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் இத்திட் டத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் முயற்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொது மேலாளர் (சில்லறை மற்றும் விற்பனை) டி.எல்.பிரமோத் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 ஆயிரத்து 70 பெட்ரோல் பங்குகள் உள்ளன. மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற் பட்டுள்ள சில்லறை தட்டுப் பாட்டால் இந்தப் பங்குகளில் எரிபொருள் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப் பட்டனர். எனவே அவர்கள் பயன்பெறும் வகையிலும், மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனையை செயல் படுத்தும் விதமாகவும் இந்தி யன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளில் ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவி கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஆயிரத்து 450 பெட்ரோல் பங்குகளில் பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்பட் டுள்ளன. எஞ்சியுள்ள பங்கு களுக்கு 10 நாட்களுக்குள் இந்தக் கருவிகள் வழங்கப்பட்டு விடும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கிகளுடன் இணைந்து இந்தக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, பேடிஎம், ஜியோ மணி உள்ளிட்ட இ-வேலட்டுகள் மூலமாகவும் பணப் பரிவர்த்தனை மேற் கொள்ளும் திட்டமும் செயல் படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 486 பெட்ரோல் பங்குகளில் இந்த இ-வேலட் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய பெட்ரோல் பங்கு களில் இருந்து கேஒய்சி படிவம் பெறப்பட்டு இத்திட்டத்தை செயல்படுத்த விரைவாக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ‘எக்ஸ்ட்ரா பவர்’ என்ற கார்டு வழங்கப்பட்டுள்ளது. இக் கார்டை பயன்படுத்தியும் எரி பொருள் நிரப்ப பணம் செலுத்த லாம்.
இந்தப் பணமில்லா பரிவர்த் தனை குறித்து வாகன ஓட்டி களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக பெட்ரோல் பங்கு களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரமோத் கூறினார்.