கொ.மு.க.விலிருந்து விலகிய ஜி.கே.நாகராஜ் நாளை (பிப்ரவரி 2) புதிய கட்சியைத் தொடங்குகிறார். இதற்கான விழா கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெறுகிறது.
‘தி இந்து’வுக்கு நாகராஜ் அளித்த பேட்டி: புதிய கட்சியில் கொ.மு.க. விலிருந்து விலகிய அத்தனை நிர்வாகிகளும் இடம் பெறுகின்றனர்.
புதுக் கட்சிக்காக கொங்குநாடு மக்கள் முன்னேற்றக்கழகம், கொங்கு தேச மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, கொங்கு தேசம், கொங்குதேச திராவிடர் கழகம், கொங்கு தேச ஜனநாயக கட்சி என 6 பெயர்களை இறுதிப்படுத்தி வைத்திருக்கிறோம் இதில் ஒன்றைத்தான் கட்சிப் பெயராக நாளை அறிவிக்வுள்ளோம்’’ என்றார். கொங்கு மண்டலத்தில் முதலில் செழியன் தலைமையில் கொங்குவேளாளர் கவுண்டர் பேரவை உருவானது. அதுவே பின்னாளில் தமிழ் தேசியக் கட்சியாக மாறியது. தொடர்ந்து அதிலிருந்து பிரிந்த தனியரசு கொங்கு பேரவையையும், குமார ரவிக்குமார் கொங்கு
இளைஞர் பேரவையையும் உருவாக்கினர். பிறகு கொங்குநாடு முன்னேற்றப்பேரவை (கொ.மு.பே) உருவாகி அதிலிருந்து கொங்குநாடு முன்னேற்றக்கழகம் (கொ.மு.க) வந்தது.
அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமியோடு முரண்பட்டு கொ.மு.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை உருவாக்
கினார். கொ.மு.க.வில் மறுபடியும் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதன் பொதுச்செயலாளர் ஜி.கே.நாகராஜூம் தற்போது புதியதொரு கொங்கு கட்சியை உருவாக்குகிறார்.