தமிழகம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு சென்னையில் தொடங்கியது: 40 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிகிறது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என சுமார் 9 லட்சம் பேர் எழுதுகின்றனர். பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவர வியல், விலங்கியல் உள்ளிட்ட அறி வியல் பாடங்கள், தொழிற்கல்வி பாடங்களுக்கு கருத்தியல் (தியரி) தேர்வுடன், செய்முறை (பிராக் டிகல்) தேர்வும் உண்டு.

செய்முறைத் தேர்வு கண் காணிப்பு பணிக்கு வேறு பள்ளி களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தான் ஈடுபடுத்தப்படுவார்கள். இத னால், மாநிலம் முழுவதும் செய் முறைத் தேர்வு ஒரே நாளில் நடத்தப்படுவது இல்லை. ஒவ் வொரு மாவட்டத்தி லும் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அந்த வகையில், செய்முறைத் தேர்வை பிப்ரவரி 2 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில், சென்னை மாவட் டத்தில் செய்முறைத் தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளிகளை குழுவாரியாக சேர்த்து பல்வேறு கட்டங்களாக செய்முறைத் தேர்வு நடத்தப்படுவதாகவும், 303 மையங்களில் 40,033 மாணவ, மாணவிகள் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்வதாகவும் மாவட்ட முதன்மைக் கல்வி கல்வி அதிகாரி அனிதா தெரிவித்தார். தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் செய்முறைத் தேர்வில் பங்கேற்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரி வித்தார்.

SCROLL FOR NEXT