சுஜிபாலாவுக்கும் எனக்கும் திருமணம் ஆனது உண்மை. அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதை எந்த நேரத்திலும் வெளியிடத் தயாராக இருக்கிறேன் என்று இயக்குநர் பி.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடிகை சுஜிபாலா இயக்குநர் பி.ரவிக்குமார் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித் தார். ‘ரவிக்குமாருக்கும் தனக் கும் திருமணம் ஆகவில்லை. அவர்தான் என் போனை ஒட்டுக்கேட்கிறார். நடனப் பள்ளியில் இருந்தபோது என்னை அடித்தார். கொலை மிரட்டலும் விடுத்தார்’ என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து, சனிக்கிழமை இயக்குநர் பி.ரவிக்குமார் கூறியதாவது:
எனக்கும் சுஜிபாலாவுக்கும் 2012-ல் திருமணம் ஆனது உண்மை. எங்கள் திருமணம் நடந்த தற்கு ஆதாரமாக நிறைய புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. ஆனால், திருமணம் நடக்க வில்லை என்று சொல்லுமாறு அந்தப் புகைப்படத்தில் உள்ளவர்களிடம் அவர் கூறிவருவதாகக் கேள்விப்பட்டேன்.
சுஜிபாலா முன்பு தற்கொலை செய்துகொண்டது போல் நடித்த வர். அவருக்கு நான் நாகர்கோயி லில் ஒரு வீடு வாங்கிக்கொடுத் ததும் உண்மை. அதையும் நான் நிரூபிக்கத் தயாராக இருக்கி றேன். என் மனைவி மீது கொண்ட அன்பால் இதையெல்லாம் செய்தேன். அவர் தற்போது தேவையில்லாத நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிந்து அதைத் தட்டிக்கேட்டேன். அதற்குத்தான் அடித்தேன், மிரட்டினேன் என்று புகார் கொடுத்து வருகிறார். கடந்த 2012 வரைக்கும் எப்படி இருந்தார் என்பது அவருக்கே தெரியும். இப்போது ஏன் மாறிவிட்டார் என்று தெரியவில்லை. எதையும் நான் எதிர்கொள்ளத்தயாராக இருக்கிறேன். இப்போதும் சுஜி பாலாவை என் மனைவியாகத்தான் நினைத்திருக்கிறேன்.
இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.