பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜுன் 22-ம் தேதி வெளியிடப்படுகிறது. பொது கலந்தாய்வு ஜுன் 27-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறி யியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 70 பேர் ஆன்லைனில் பதிவுசெய்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 722 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். அவர் களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மாண வர்களுக்கான ரேண்டம் எண் ஜுன் 20-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும். (ரேண்டம் எண் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும்போது அவர் களில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதை முடிவு செய்யும் வாய்ப்புக்காக கணினி மூலம் வழங்கப்படும் சிறப்பு எண் ஆகும்).
ரேண்டம் எண் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) ஜுன் 22-ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுன் 24-ம் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜுன் 25-ம் தேதியும் நடத்தப்படும். பொது கலந்தாய்வு ஜுன் 27-ம் தேதி முதல் தொடங்கும். கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதத்தை மாணவர் கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பெயர், பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அழைப் புக்கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவிகளின் நலனைக் கருத்தில்கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு தாய் அல்லது சகோதரியுடன் வரும் மாணவிகள் மட்டும் கலந்தாய்வுக்கு முந் தைய தினம் இரவு அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கிக்கொள்ளலாம்.
கலந்தாய்வு மூலம் எத்தனை இடங்கள் நிரப்பப்படும், கலந் தாய்வு எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற விவரங்கள் தரவரிசைப் பட்டியல் வெளி யிடப்படும்போது தெரிவிக்கப் படும்.
ஆன்லைனில் பதிவு செய்தபோது இரண்டு முறை அல்லது 3 முறை விண்ணப்பித்து அதற்கான கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு அக்கட்டணம் திருப்பி கொடுக்கப்படும். அதற்கு அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த ஆண்டு பொறியியல் படிப்புில் சேர ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை வாங்கியிருந்தனர். ஆனால் அவர்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்த னர். கலந்தாய்வுக்கு வந்தவர் களில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர்தான் கல்லூரியை தேர்வுசெய்தனர். பொறியியல் படிப்பில் சேரும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்து விடவில்லை எந்த பாடப்பிரிவை படித்தாலும் சிறப்பாக படித்தால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை பேராசிரியை மல்லிகா, இயக்குநர் ஜி.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.