சர்வதேச அளவில் கடந்த 2 வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்ததால், உள்ளூ ரிலும் தங்கம் விலை அதிக ரித்து வந்தது. இதற்கிடையே, சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று உயர்ந்தது. இதனால், உள்ளூரில் தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.22,424-க் கும், ஒரு கிராம் ரூ.2,803-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன் தினம் ஒரு கிராம் ரூ.2,838 ஆக இருந்தது.
சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந் துள்ளதால் தங்கம் விலை குறைந்துள்ளது. அட்சய திருதியை நெருங்கவுள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.