தமிழகம்

பட்டுக்கோட்டை திமுக நிர்வாகி கொலை: திமுகவினர் 7 பேர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் த.மனோ கரன்(60). இவர், பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளராகவும், நகர்மன்ற 9-வது வார்டு உறுப்பின ராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று முன்தினம் பட்டுக்கோட் டையில் ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மனோகரனின் அண்ணன் மகன் பாரிவேல் கார்த்தி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

ஒரு வாரத்துக்கு முன் பட்டுக் கோட்டை கடைவீதியில் மனோ கரனை பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சீனி.இளங்கோ (திமுக) சந்தித்துள் ளார். அப்போது, ஏற்கெனவே என் அண்ணன் சீனி.அண்ணாதுரை வகித்து வந்த நகர திமுக செய லாளர் பதவியைப் பறித்து விட்டாய். வரும் நகராட்சித் தேர் தலில் திமுக தலைமையிடம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு நீ சீட் கேட்டால், உன்னை தொலைத் துக் கட்டி விடுவோம்’’ என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சீனி.இளங்கோ, சீனி.அண்ணாதுரை, இவர்களின் அண்ணன் மறைந்த சீனி.பன்னீர் செல்வத்தின் மகன்களான ராஜா என்கிற மணிமாறன், பிரகாஷ் என்கிற தனியரசு மற்றும் இவர் களுடைய நண்பர்கள் விக்ரம், தட்சிணாமூர்த்தி, சதாம் உசேன் ஆகியோர் மனோகரனை கொடூர மாக கொலை செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின்பேரில், திமுக வைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த பட்டுக்கோட்டை நகர போலீஸார், நேற்று முன்தினம் இரவு சீனி.அண்ணாதுரையை காவல் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். அங்கு, அவரிடம் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சுதாகர் விசாரணை நடத்தினார். தலைமறைவாகிவிட்ட சீனி.இளங்கோ உள்ளிட்ட 6 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT