தமிழகம்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுகோள்: வழக்கறிஞர் சட்டத் திருத்தம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு - சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய திருத்தங்களை தற்கா லிகமாக நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள் ளது. வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்பதே தனது விருப்பம் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் சட்டம்-1961 பிரிவு 34(1)-ல் வழங்கியுள்ள அதிகாரத்தின் உட்பிரி வுகளான 14 (ஏ,பி,சி,டி) ஆகியவற்றில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு அதுதொடர்பான அறிவிக்கை கடந்த மே 25-ல் வெளியிடப்பட்டது. இந்த புதிய சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதமாக தமிழக வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்திருந்தனர். இதற்கிடையே, போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திய இந்திய பார் கவுன்சில், 126 தமிழக வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்க றிஞர்கள் முற்றுகையிட்டு 10 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தால் பாரிமுனை பகுதியே ஸ்தம்பித்தது. போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். போராட்டம் தொடர்பாக 30-க் கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

வழக்கறிஞர் காசிராமலிங்கம் ஏற்கெ னவே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், ‘தமி ழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதி மன்றங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் மட்டுமே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை உறுதி செய்ய முடியும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்த மன் கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்து, ‘‘அனைத்து நீதிமன்றங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும்வரை வழக் கறிஞர் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத் திருத்தங்களை நிறுத்திவைக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தலைமை நீதிபதி கூறியதாவது:

புதிய சட்டத் திருத்தங்களின்படி எந்த வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்கப் படாது என பலமுறை அறிவித்துவிட் டோம். அதை வழக்கறிஞர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் நோக்கம் வேறுவிதமாக உள்ளது. அவர்களின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

கடந்த 2009-ல் வழக்கறிஞர்களுக்கு போலீஸார் எதிரியாக தெரிந்தனர். இப்போது நாங்கள் (நீதிபதிகள்) அவர் களுக்கு எதிரிகளாக தெரிகிறோம். இந்த சூழ்நிலையை வேறு எங்கும் பார்த்ததில்லை. உயர் நீதிமன்றத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். ஆனால், வழக்க றிஞர்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்சி னையை முன்னெடுக்கின்றனர்.

வழக்கறிஞர்கள் அனைவரும் தங்க ளது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னு டைய விருப்பம். அதேநேரம் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்தச் சூழலிலும் நீதி மன்றங்களின் செயல்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இவ்வாறு தலைமை நீதிபதி தெரி வித்தார்.

வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் வாதிடும்போது, ‘‘நீங்கள் தலைமை நீதிபதி. வழக்கறிஞர்களுக்கு தந்தையை போன்றவர். உங்களது பிள்ளைகள் சாலை யில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். எனவே, புதிய சட்டத் திருத்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தால், எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளியாக அது அமையும்’’ என்றார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு பிறப் பித்த உத்தரவில், “வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட் டுள்ள புதிய சட்டத் திருத்தங் களை நிறுத்தி வைக்க வேண்டும் என மனு தாரர் கோரியுள்ளார். நாங்கள் ஏற்கெனவே இந்த கோரிக்கையை அனைத்து நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு கூட்டத்தி லேயே ஏற்று, அந்த உத்தரவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளோம். எனவே, புதிய சட்டத் திருத்தங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT