தமிழகம் முழுவதும் 120 ஊராட்சி தலைவர்களின் காசோலை அதிகாரம் பறிக்கப் பட்டது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு பெண் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் என்.சித்ரா, காஞ்சிபுரம் மாவட்டம் மெய்யூர் ஊராட்சி தலைவர் அமுல் பிரேமாவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
அரசியலமைப்பு சட்ட அதி காரம் 40 மற்றும் அதிகாரம் 243 முதல் 243ஓ வரை உள்ள சட்டப் பிரிவுகள் கிராம ஊராட்சிக ளின் அதிகாரத்தை தெளிவாக கூறுகின்றன. ஆனால், தமிழ்நாடு ஊராட்சி சட்டங்கள்படி, ஊராட்சி தலைவர்களுக்கான சிறப்பு அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனநா யக முறைப்படி தேர்வு செய்யப் படும் ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை, நிர்வாக ரீதியாக பொறுப்பு வகிக்கும் ஆட்சியர் பறிப்பது சட்டவிரோதமானது.
இதேபோல, ஊராட்சி தலை வர்கள், துணைத் தலைவர் கள் காசோலைகளில் கையெழுத் திடும் அதிகாரம் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டப்படி வழங் கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங் களில் ஒன்று. இந்த அதிகாரமும் பெரும்பாலான ஊராட்சிகளில் பறிக்கப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திரு வண்ணாமலையில் 24, செய் யாரில் 15, பெரம்பலூரில் 23, திருவள்ளூரில் 21, தேனியில் 15, வேலூரில் 12, திருச்சியில் 10 என தமிழகம் முழுவதும் மொத்தம் 120 ஊராட்சி தலைவர்களிடம் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவசர காலகட்டங்களில்கூட ஊராட்சி நிதியை எடுக்க முடி யாமல் பணிகள் தேங்கியுள்ளன.
ஊராட்சி நிதி நிர்வாகத்தில் தலையிட மாவட்ட ஆட்சியர்க ளுக்கு அதிகாரம் கிடையாது. ஊராட்சி நிதியைக் கையாள மூன்றாவது நபர்களை அனுமதிக்க முடியாது. எனவே, ஊராட்சி தலைவர்களின் காசோலை அதிகாரம் ஆட்சியர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டதற்கும், ஊராட்சி நிதி நிர்வாகத்தில் ஆட்சியர்கள் தலையிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து ஊராட்சி நிர் வாகங்கள் சிறப்பாக செயல்பட வழிவகுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு இந்த மனு நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் பி.செல்வி ஆஜரானார். இதுதொடர்பாக செப்டம்பர் 8-ம் தேதிக்குள் பதி லளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.