கடந்த 17-ம் தேதி சட்டப் பேரவையில் அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 79 திமுக உறுப்பினர்கள் ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
18-ம்தேதி பேரவை வளாகத் தில் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். 19-ம் தேதி எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் போட்டி சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தினர்.
அதுபோல காவல் துறை மானியக் கோரிக்கையின்போது திமுக எம்எல்ஏ-க்கள் போராட் டத்தில் ஈடுபடக் கூடாது என்பதற் காக சட்டப்பேரவை வளாகத் தில் நேற்று ஆயிரக்கணக்கான போலீ ஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வராமல் சேப்பாக்கம் ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலேயே இருந்தனர். காலை 10.30 மணிக்கு அங்கு வந்த மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொறடா அர.சக் கரபாணி உள்ளிட்ட திமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். சுமார் 30 நிமிடங்கள் இந்த ஆலோசனை நடைபெற்றது.
கருணாநிதியுடன் ஆலோசனை
பின்னர் கோபாலபுரம் சென்ற ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். பேரவைத் தலைவரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் கருணாநிதியுடன் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட் டோர் ஆலோசனை நடத்தினர்.