தமிழகம்

சாதிச் சான்றிதழ் கேட்டு பழங்குடியினர் போராட்டம்

செய்திப்பிரிவு

திருகோவிலூரை அடுத்த வடகரை தாழனூரில் வசிக்கும், 150 பழங்குடி இனத்தைச் சேர்ந்த இருளர் இனக் குடும்பங்களுக்கு சாதி சான்று மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் உள்ளிட்ட எந்தத் திட்டங்களும் இதுவரையில் கிடைக்க வில்லை தொல் பழங்குடி இருளர் அறக்கட்டளைத் தலைவர் நடுப் பட்டு ரவி தலைமையில் இந்த இன மக்கள் திரண்டு, நேற்று விழுப்புரம் கலெக்டர் சம்பத்திடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுவில் வடகரை தாழனூரில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், தாழ்த்தப்பட்டப் பழங்குடியினர் நலவாரியம் சார்பில் கறவை மாடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

SCROLL FOR NEXT