தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை மட்டுமே ரவுடி பட்டியலில் சேர்க்க முடியும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த வர் கே.பாண்டியராஜன். இவர் ரவிச்சந்திரன் என்பவரை தாக்கியதாக 2012-ல் அன்னவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்த னர். இந்த வழக்கு காரணமாக பாண்டியராஜனின் பெயர் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந் நிலையில், தனது பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பாண்டியராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
மனுவில், தன் மீது ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லை. இருப்பினும், எனது பெயரை ரவுடிகள் பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளனர் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் நேற்று விசாரணைக்கு வந் தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதிசுப்பிரமணியன் வாதிட் டார். அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணி வாதிடும்போது, மனுதாரரால் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “பொதுவாக குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரின் பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தால், அந்தப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், மனுதாரர் பெயரை ரவுடிகள் பட்டியலில் சேர்த்ததோடு சரி. அதன் பிறகு புதுப்பிக்கவில்லை. தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர், வழக்கில் தண்டனை பெற்றவர்கள், குற்றங் களை தூண்டி விடுவோரை மட்டுமே ரவுடிகள் பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்க முடியும். ஆனால், மனுதாரர் இப்பட்டியலில் வரவில்லை. இதனால் மனுதாரரின் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.