தமிழகம்

12.5 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 20 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

செய்திப்பிரிவு

12 லட்சத்து 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியிருந்த குரூப்-4 தேர்வின் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இத்தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 20-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் அடங்கிய இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் (கிரேடு-1), நில அளவர், தட்டச்சர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட்டது.

இத்தேர்வில் 12 லட்சத்து 51 ஆயி ரத்து 291 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 396 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகிய வையும் இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை விவரங்களை தங்களது பதிவு எண்ணை இணையதளத்தில் குறிப்பிட்டு தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத் தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரி பார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் மார்ச் 20 முதல் அழைக்கப்படுவர்.

தேர்வாணைய இணையதளத்தில்..

இதைத்தொடர்ந்து தரவரிசை நிலை, காலியிடம், இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படை யில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக் கப்படுவார்கள். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். எழுத் துத்தேர்வில் கலந்துகொண்டு, பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT