தமிழகம்

செம்மரம் கடத்தல் வழக்கில் ஊராட்சி தலைவர் கைது

செய்திப்பிரிவு

செம்மரம் கடத்தல் வழக்குகள் தொடர்பாக, அதிமுகவைச் சேர்ந்த பாடியநல்லூர் ஊராட்சி தலைவர் பார்த்திபனை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் - மொண்டியம்மன் நகர், மூவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(45). இவர் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.

பார்த்திபன் மீது செம்மரம் கடத்தல் தொடர்பாக ஆந்திர மாநிலம் கடப்பா, சித்தூர் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக, பார்த்திபனை ஆந்திர போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, சென்னை அண்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பார்த்திபனை ஆந்திர போலீஸார் சுற்றி வளைத்தனர். பிறகு, இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் தெரிவித்த ஆந்திர போலீஸார், பார்த்திபனை கைது செய்து ஆந்தி ராவுக்கு கொண்டு சென்றனர்.

செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுபாக்கம் கிராமத்தில் தனியார் கிடங்கில் ஆந்திர போலீஸார் நடத்திய சோதனையில் 50 கிலோ எடை கொண்ட ஒரு செம்மரக் கட்டை கைப்பற்றப்பட்டது. அந்த கிடங்குக்கு ‘சீல்' வைத் தனர்.

கட்சியிலிருந்து நீக்கம்

இதனிடையே திருவள் ளூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பார்த்திபன் நீக்கப்படு வதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT