முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முடிவை உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் பாராட்டுகின்றனர் என திருப்பூர் எம்பி சத்தியபாமா தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் சத்தியபாமா கோபிசெட்டி பாளையத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நான் முதல்வருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக ஏராளமான பொதுமக்கள் எனக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் செல்போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சர் பன்னீர்செல்வம் எடுத்தது சிறந்த முடிவு என அவர்கள் பாராட்டினர். அவரது முடிவை உலகமே பாராட்டுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கடவுளும் மன்னிக்கமாட்டார். ஜெயலலிதாவின் ஆன் மாவும் மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறினார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியினர் ஆதரவு தெரிவிக் கும் வகையில், சத்தியபாமா எம்பியின் அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மான புத்தகத்தில், கோபி சட்டப்பேரவைத் தொகு திக்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து கையெழுத்திட்டுச் செல்கின்றனர்.