தமிழகம்

வளசரவாக்கம் ஆர்டிஓ சார்பில் 5 இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படம் திரையிடல்

செய்திப்பிரிவு

வளசரவாக்கம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட 5 இடங்களில் போக்குவரத்து விழிப் புணர்வு குறும்படங்கள் திரையிடப் படுகிறது.

சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய அளவில் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டுமென போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் திரை யிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வளசரவாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத் துக்கு உட்பட்ட வடபழனி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு குறும் படம் நேற்று திரையிடப்பட்டது. இதில், போக்குவரத்து இணை ஆணை யர் பி.ராமலிங்கம், வாகன ஆய்வாளர் கள் வி.பி.சுரேஷ்குமார், வி.அருணாச் சலம் உட்பட பலரும் பங்கேற்றனர்.

இது குறித்து வளசரவாக்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எம்.ஸ்ரீதரன் கூறும்போது, ‘‘பொது மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் குறும்படங்கள் திரையிட வேண்டுமென அறிவுறுத் தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது, வடபழனி பேருந்து நிலையத்தில் திரை மூலம் சாலை பாதுகாப்பு தொடர்பாக குறும்படம் திரையிட்டோம். வாகனம் ஓட்டும் போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகள் என்ன? உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 இடங்களில் இது போன்ற திரையிடல் நிகழ்ச்சி நடத்த வுள்ளோம்’’ என்றார்.

SCROLL FOR NEXT