தமிழகம்

நெல்லை அருகே வெங்கடாஜலபதி கோயிலில் திருட்டு முயற்சி: அலாரம் ஒலித்ததால் ஐம்பொன் சிலைகள், நகைகள் தப்பின

செய்திப்பிரிவு

தென்திருப்பதி எனப்படும் மேல திருவேங்கடநாதபுரம் வெங் கடாஜலபதி கோயிலில் நேற்று அதிகாலை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். அலாரம் ஒலித்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள், 4 கிலோ தங்க நகைகள் தப்பின.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர் கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவர். அதுபோல் புரட்டாசி மாதம் இங்கு நடைபெறும் கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்த கோயிலில் பாதுகாப்பு பெட்டக அறையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மற்றும் 4 கிலோ தங்க நகைகள் உள்ளன. மேலும், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15-க் கும் மேற்பட்ட கோயில்களின் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு கருதி இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை கோயிலுக்கு வந்த மர்ம நபர்கள், முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந் துள்ளனர். பின்னர் அடுத்துள்ள சன்னதி வாசல் கதவை உடைத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அதன் பிறகு பிரதான கதவை உடைக்க முயன்றுள்ளனர். அப் போது அந்த கதவுடன் இணைக் கப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்டு கோயில் காவலாளி சுடலைமுத்து (65) மற்றும் ஊர் மக்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால், மர்ம நபர்கள் அதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். சுத்தமல்லி போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

கோயிலில் பொருத்தப்பட்டி ருந்த சிசிடிவி கேமராவில் பதி வான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். 2 நபர்கள் கோயிலுக்குள் வந்து திருட்டு முயற்சியில் ஈடு பட்டது தெரியவந்தது.

SCROLL FOR NEXT