தமிழகம்

சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை

செய்திப்பிரிவு

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் கொட்டிவாக்கத்திலுள்ள இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சரத்குமார் இல்லதுக்கு முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சரத்குமார் மனைவி ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனத்திலும வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக திங்கட்கிழமை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சரக்குமார் 5 மணி நேரத்துக்கு மேலாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT