சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் டி.ரவீந்திரன் உள்ளிட்ட 15 பேர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் இவர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் டி.ரவீந்திரன், பதிவாளர் (நீதித்துறை) எஸ்.பாஸ்கர், பதிவாளர் (ஊழல் மற்றும் கண்காணிப்பு) பி.வேல்முருகன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது, புதுச்சேரியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல வழக்கறிஞர்கள் ஆர்.பார்த்திபன், ஆர்.சுப்பிரமணி யன், எம்.சுந்தர், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.எஸ்.ரமேஷ், டாக்டர் அனிதா சுமந்த், ஜே.நிஷாபானு, ஜி.கோவிந்தராஜ் ஆகிய 9 பேரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இந்தி தேவநாகரி மொழியில் நேற்று சம்பிரதாயப்படி ஆவணங்களில் கையெழுத்திட்டனர். விரைவில் இவர்கள் 15 பேரும் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பொறுப்பேற்க உள்ளனர்.