தமிழகம்

குருவாயூர் விரைவு ரயிலில் 2 முன்பதிவு பெட்டிகள் நீக்கம்: நெல்லைக்கு சிறப்பு ரயில்

செய்திப்பிரிவு

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில் (எண்.16127/28) 2 முன்பதிவு பெட்டிகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக 2 முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த புதிய நடைமுறை கடந்த 6-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த புதிய நடைமுறை வரும் 27-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண்.06007) வரும் 17-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 2.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06008) வரும் 19-ம் தேதி கொச்சுவேலியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, திருச்சி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர்-திருநெல் வேலி இடையே வரும் 23-ம் தேதி சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82601) இயக் கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (82602) திருநெல்வேலியில் இருந்து வரும் 26-ம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

திருச்சி - சென்னை எழும்பூர் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06026) வரும் 11, 18 மற்றும் 25-ம் தேதிகளில் திருச்சியில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்குப் புறப்பட்டு அன்று இரவு 9.10 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06025) 15, 22 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு அன்று பிற்பகல் 3.10 மணிக்கு திருச்சி சென்றடையும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06031) வரும் 13, 20, 27-ம் தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06032) 14, 21, 28-ம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

ரயில் ரத்து

கோயம்புத்தூர் - லோக்மான்யா திலக் விரைவு ரயில் நாளை (9-ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. இதன் இணை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

SCROLL FOR NEXT