தமிழகம்

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனி கவனம் செலுத்த வேண்டும்: காவல், நீதித்துறையினர் கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுரை

செய்திப்பிரிவு

பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான குற்ற வழக்குகளில் காவல்துறை, நீதித்துறையினர் தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கு உடனே நீதி கிடைக்க பாடுபட வேண்டும் என்று காவல்துறை நீதித்துறை நடுவர்கள் இடையி லான கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை பெருநகரக் காவல் துறை, பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதித்துறை நடுவர்மன்றம் இடையிலான 2016-ம் ஆண்டுக்கான முதலாவது அரையாண்டு கலந்தாய் வுக் கூட்டம் எழும்பூரில் நேற்று நடந்தது. இதில் சென்னை பெரு நகரக் காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் ஆணை யர்கள் சி.தர் (வடக்கு), கே.சங்கர் (தெற்கு), அபய்குமார் சிங் (போக்குவரத்து), சு.அருணாச்சலம் (மத்திய குற்றப்பிரிவு), எஸ்.என்.சேஷசாயி (தலைமையிடம்) மற்றும் இணை, துணை ஆணையர்கள் கலந்துகொண்டனர்.

நீதித்துறை சார்பில் முதன்மை பெருநகர நடுவர் சந்திரன், 5-வது பெருநகர நடுவர் எம்.ராஜா, 11-வது பெருநகர நடுவர் பிரகாஷ், அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை பெருநகரக் காவல் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணைகள், தண்ட னைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும் இதில் ஆலோ சிக்கப்பட்டது. கலந்தாய்வில், சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன், முதன்மை நீதித்துறை நடுவர் சந்திரன் வழங்கிய ஆலோசனைகள்:

காவல்துறை, நீதித்துறை இணைந்து பணியாற்றி, குற்றவாளி களுக்கு தகுந்த தண்டனை பெற் றுத் தரவேண்டும். காவல்துறையி னரின் பணிகள், சேவைகள் பொது மக்களுக்கு முழுமையாக கிடைக் கும் வகையிலும், அவர்களின் முழு நம்பிக்கையைப் பெறும் வகையிலும் பணியாற்ற வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் காவல் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி, அவர்களுக்கு உடனே நீதி கிடைக்க பாடுபட வேண்டும்.

நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதில் இரு துறையினரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, ஒருங்கிணைந்து செயல்பட வேண் டும். நிலுவை வழக்குகள், அதன் தன்மை குறித்து ஆலோசிக்க காவல்துறையில் மாதந்தோறும் கலந்தாய்வுகள் நடத்த வேண் டும். காவல்துறை அதிகாரி கள் அவ்வப்போது நீதித்துறை யினருடன் இணைந்து, வழக்கு விசாரணைகள் குறித்து கலந் தாய்வு செய்து அறிவுரைகள், ஆலோசனைகள் பெறலாம்.

வழக்கு விசாரணை முறை, வழக்கை கையாள்வது தொடர் பாக உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு நீதித்துறை அலுவலர்கள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. போலீஸாரின் புலன்விசாரணை திறனை மேம்படுத் தும் விதமாக நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளில் நீதித்துறை அலுவலர் களும் பங்குபெற்று கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் ஆலோசனை கூறினர்.

SCROLL FOR NEXT