தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகக் கருதுகிறேன் என உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நிய மிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று பிரிவுபசார விழா நடத் தப்பட்டது. விழாவில் மூத்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.ஜெய்சந்திரன், எஸ்.மணிக் குமார், எஸ்.நாகமுத்து, ஆர்.சுப் பையா, கே.கே.சசிதரன், எம்.வேணு கோபால், எம்.எம்.சுந்தரேஷ் உள்ளிட்ட அனைத்து நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ராஜ ரத்தினம் உள்ளிட்ட அரசு வழக் கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலை வாழ்த்தி அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி பேசும்போது, ‘‘தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் பொறுப்பேற்க வந்தபோது உயர் நீதிமன்றத்தின் நிலை கடும் மோசமாக இருந்தது. முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் இங்கிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்லும்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு பிற மாநில நீதிபதிகள் தயங்குகின்றனர் என வெளிப்படையாகப் பேசிவிட்டு சென்றார். ஆனால், தற்போது அந்த நிலையை எஸ்.கே.கவுல் மாற்றிவிட்டார். தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு வசதிகளை உயர் நீதிமன்றத்தில் கொண்டு வந்துள்ளார்’’ என்றார்.
ஆண்டு மலரை வெளியிட்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், தனது ஏற்புரையில் கூறியதாவது:
வாழ்க்கைப் பயணம் என்பது வளைந்து நெளிந்து செல்லும் ஆறு போன்றது. நான் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவன். டெல்லி யில் பிறந்தவன். பஞ்சாப், ஹரி யானா வழியாக தெற்கே சென் னைக்கு வந்தடைந்தவன். சுமார் இரண்டரை ஆண்டுகளாக பாரம் பரியமிக்க உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளதை மிகவும் பெரு மையாக கருதுகிறேன்.
தமிழக கலாச்சாரமும், பாரம் பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக்கண்டு ஆச்சரியமடைந் தேன். காதல், வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழகத்தின் அடையாளம். தமிழ் மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்றும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றும் சங்ககால தமிழ்ப் புலவர் கனியன் பூங்குன்றனார் எழுதியுள்ளார்.
அத்தனை பாரம்பரியம், கலாச் சாரம் மிக்க தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது தாய் வீடாகத்தான் கருதுகிறேன். சென்னையை விட்டுச் செல்வது உண்மையிலேயே மிகவும் வருத்தமாக உள்ளது.
இங்கு தலைமை நீதிபதியாக பதவியேற்கும்போது எனக்கு மிகப்பெரிய சவால்கள் இருந்தன. ஆரம்பத்தில் இங்குள்ள வழக் கறிஞர்களை நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதே போல் அவர்களும் என்னை புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நான் எப்படி நீதிபதியாக செயல்பட்டேன் என்பதை வழக்கறிஞர்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீதித்துறையில் காலிப்பணி யிடங்கள் அதிகம் இருப்பது சமுதாயத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். நிவாரணம் தேடி நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு, அந்த நிவார ணம் உடனே கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும். எனவே, நீதித் துறையில் நீதிபதி பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளம் வழக்கறிஞர்கள் பொரு ளாதார ரீதியாக முன்னேற மூத்த வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’ என எழுதி வைத்துள்ளார். அதற்கேற்ப குழப் பமான மனநிலையில் இங்கு வந்த நான், மனநிறைவோடு பணியாற்றி வெற்றியோடு செல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.