சென்னை நகரில் வரும் 1ம் தேதி முதல், இரண்டு மணி நேர சுழற்சி முறை மின் வெட்டுக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் முதல் சுழற்சி முறையில், ஐந்து பிரிவுகளாக மின்வெட்டு அமலாகிறது. ஒவ்வொரு இடத்திலும், இரண்டு மணி நேரம் மின் விநியோகம் தடைபடும். காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை, இந்த மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதற்கான இடங்கள் முறைப்படி ஒவ்வொரு மாதமும் மின் வாரியத்தால் அறிவிக் கப்படுகின்றன.