கர்நாடக அரசைக் கண்டித்து கோயம்பேடு மார்க்கெட் மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. வியாபாரிகள் பங்கேற்ற ஆர்ப் பாட்டமும் நடைபெற்றது.
முழு அடைப்பு போராட்டத்துக்கு கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்து, அந்த மார்க்கெட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. இப்போராட்டத்தின் ஒரு பகுதி யாக, 5-ம் எண் நுழைவு வாயிலில் வியாபாரிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் பேசும் போது, “கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுள்ளன. இந்த போராட்டம் 100 சதவீதம் வெற்றிபெற்றுள்ளது. வணிகர்கள், விவசாயிகள், அரசி யல் கட்சிகள் என அனைத்து பிரிவினரும் பங்கேற்றுள்ள இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்” என்றார். கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.