தமிழகத்தில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்தியாவில் போலியோ நோயை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு 2 தவணைகளாக போலியோ சொட்டு மருந்து வழங் கப்பட்டு வருகிறது. அதன்படி தமி ழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளில் 66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங் கப்பட்டது. விடுபட்ட குழந்தை களைக் கண்டுபிடிக்க வசதியாக குழந்தைகளின் கை விரலில் அடை யாளத்துக்கு மை வைக்கப்பட்டது.
இதையடுத்து அடுத்த ஒரு வாரத்தில் சுகாதாரப் பணியாளர் கள் வீடு வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினர். இந் நிலையில் தமிழகத்தில் இரண் டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 30-ம் தேதி நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில்1652 மையங்கள் அமைக்கப்படுகின்றன.
தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இவ்வாறு க.குழந்தைசாமி தெரிவித்தார்.