தமிழகம்

தனியாருக்கு தாரைவார்க்காமல் சேலம் உருக்காலையை லாபத்தில் இயங்கச் செய்வது எப்படி? - மத்திய அரசுக்கு கருணாநிதி யோசனை

செய்திப்பிரிவு

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் லாபத்தில் இயங்கச் செய்வது எப்படி என்பது குறித்து மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி 2 யோசனைகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கி வரும் 17 பொதுத்துறை நிறுவனங்களை மூடுவதற்கும், 22 பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குகளை 51 சதவீதத்துக்கு கீழ் குறைப்பதற்கும் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இந்த இரண்டா வது பட்டியலில் சேலம் உருக் காலையும் இடம் பெற்றுள்ளது.

சேலம் உருக்காலையைத் தனி யாருக்கு விற்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்ததை எதிர்த்து அங்கு பணிபுரியும் தொழி லாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ள னர். 21-3-1970 அன்று நான் முதல்வராக இருந்தபோது, பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றேன். அப் போது, சேலம் உருக்காலைத் திட்டம் இடம்பெறாவிட்டால், ஐந்தாண்டுத் திட்ட வரைவை தமிழ்நாடு ஏற்காது என்றேன்.

இதன்பேரில், நான்காவது ஐந்தாண்டு திட்டத்தில் சேலம் உருக்காலை பற்றிய அறிவிப்பு வெளியானது. 1970-ம் ஆண்டு செப்டம்பரில் சேலம் உருக் காலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில், நானும் இந்திரா காந்தியும் பங்கேற்றோம்.

சேலம் உருக்காலை, 2003 முதல் 2010 வரை ஆண்டுக்கு சராசரியாக ரூ.100 கோடி லாபம் ஈட்டி வந்தது. அதற்குப்பிறகு, ரூ.2 ஆயிரம் கோடி செலவில் அங்கே ஒரு எஃகு உற்பத்திக் கூடம் அமைக்கப்பட்டது. இத னால், உருக்காலையின் கடன் சுமை அதிகமானது. இதை யடுத்து, அந்நிறுவனம் இழப் பில் இயங்குவதாகக் கூறி அதை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற காரணங்களைச் சொல்லி, சேலம் உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், நிர்வாகத் திறமை மிக்க நபர்களை மத்திய அரசு பணியமர்த்த வேண்டும்.

சேலம் உருக்காலையில் தனி யாக மின் உற்பத்தி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ரூ.7.70 வரை செலவு ஏற்படும். ஆனால், உருக்காலை யில் ரூ.4-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய லாம். சேலம் உருக்காலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள 120 மெகாவாட் மின்சார தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால், உருக்காலைக்கு 60 மெகாவாட், தமிழக மின்சார வாரியத்துக்கு 60 மெகாவாட் கிடைக்கும். மேலும், ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை சேலத்தில் தொடங்கலாம். இத்தகைய ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளாமல், அதை தனியாருக்கு தாரை வார்ப்பது சரியான தீர்வு கிடையாது. சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு அதிமுக அரசு முட்டுக்கட்டை போட வேண்டும்.

ரயில்வே நிதி நிலை அறிக்கை இனி பொது நிதி நிலை அறிக்கையோடு சேர்த்து சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்டமாக கருதப்படுகிறது. மொத்தத்தில் மத்திய பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத் துறையில் முதலாளித்துவத்தையும், சிந் தனை தளத்தில் இந்துத்துவாவை யும் புகுத்திடத் துடிக்கிறது என்ற எண்ணமே மேலோங்குகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சேலம் உருக்காலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள 120 மெகாவாட் மின்சார தயாரிப்பு திட்டத்தை செயல்படுத்தினால், உருக்காலைக்கு 60 மெகாவாட், தமிழக மின்சார வாரியத்துக்கு 60 மெகாவாட் கிடைக்கும்.

SCROLL FOR NEXT