தமிழகம்

தமிழகத்தில் ஆலை விபத்துகள் குறைவு: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

செய்திப்பிரிவு

பாதுகாப்பு, சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் தொழிற்சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 17 நலவாரியங்கள் செயல் பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த நலவாரி யங்களைச் சேர்ந்த 22 லட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளாக ரூ.597.49 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 12.54 லட்சம் பேருக்கு ரூ.319.16 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. நலவாரியத்தில் வெளி மாநிலங் களைச் சேர்ந்த தொழி லாளர்களுக்கும் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 16 ஆயிரத்து 684 பேர் பதிவு செய்துள்ளனர்.

தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திலேயே மருத்துவ வசதிகள் அளிக்கும் வகையில் ரூ.14.39 கோடியில் 50 நகரும் மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டத்துக்கான 3 வாகனங்களை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தியதால் தொழிற்சாலை விபத்துகள் குறைந்துள்ளன. குறிப்பாக கடந்த 2006-11 இடைப்பட்ட ஆண்டு களில் 5 ஆயிரத்து 155 ஆக இருந்த விபத்துகள் எண்ணிக்கை, 2011-16 இடைப்பட்ட ஆண்டு களில் 3 ஆயிரத்து 97 ஆக குறைந்துள்ளது.

அறிவிப்புகள்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம், வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி மற்றும் பாடங்கள், கற்பிக்க ரூ.2 கோடியில் இணைய வழி கற்கும் முறை ஏற்படுத்தப்படும்.

போட்டித் தேர்வுகளால் ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவச வகுப்புகள் ரூ.50 லட்சத்தில் நடத்தப்படும்.

வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் 12 புதிய தொழில் பிரிவுகள் 8 அரசு ஐடிஐ-களில் ஏற்படுத்தப்படும். மொழி, கணினித்திறன் மற்றும் மென்திறன் பயிற்சி வழங்கும் வகையில், 17 அரசு ஐடிஐ-களில் மொழி மற்றும் மென் திறன் ஆய்வகம் அமைக்கப்படும்.

அரசு ஐடிஐ-களில் பணி யாளர்கள், பயிற்சியாளர்கள் உரிய நேரத்தில் வருவதை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை ஏற்படுத்தப்படும்.

தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சிகள் வாயிலாக முழுத்திறன் பெற்ற இளைஞர்களை உருவாக்க ஆண்டுதோறும் மண்டல அளவில் ரூ.10 லட்சம் செலவில் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படும். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை தேடுவோர் மற்றும் இளைஞர்களின் தொழில் திறன்களை மதிப்பிட்டு, உரிய பயிற்சிகள் வழங்க திறன் மதிப்பீடு மற்றும் ஆய்வு மையம் ரூ.1.92 கோடியில் ஏற்படுத்தப்படும்.

அமைப்பு சாரா தொழி லாளர்கள் முன் அனுபவம் மூலம் பெற்ற திறமையை அங்கீகரிக்கும் விதமாக திறன் சான்றிதழ்கள் வழங்கப்படும். இளைஞர்கள் தங்கள் தொழில் திறன் மற்றும் திறமையை வெளிப் படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படும். அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமான ஒப்பந்தப் பணிகளில் திறன் சான் றிதழ்கள் பெற்ற தொழிலாளர்களை படிப்படியாக ஈடுபடுத்த அர சாணை வெளியிடப்படும். தற்போது இயங்கி வரும் அரசு ஈட்டுறுதி மருந்தகத்தில் 13 புதிய பகுதிகள் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT