கூட்டுறவு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி ஓராண்டு ஆகியும் காப்பீட்டுக்கான அட்டை இதுவரை வழங்கப்படவில்லை. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற் றும் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி 6,245 கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பொது விநியோகத் திட்ட விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட, 41,061 சங்கப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் ஆண்டு தவணைக் கட்டணமான 2,120 ரூபாய் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களாலும், அவர்கள் பணிபுரியும் கூட்டுறவு சங்கத்தாலும் சரி பாதியாக பகிர்ந்து கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் பல சங்கங்களில் பணியாளர்கள் முதல் பிரீமி யத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அதன் பிறகும் அவர்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட வில்லை. ஒரு சில சங்கங்களுக்கு மட்டுமே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது கூட்டு றவு சங்க பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சங்க பொதுச்செயலாளர் கருத்து
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வி. ராஜேந்திரன் கூறியதாவது:-
எங்கள் சங்கத்தை பொறுத்தவரையில் மொத்தம், 900 பணியாளர்கள் உள்ளனர். இதில் ஏராளமானோர் காப்பீட்டு அட்டை பெறுவதற்காக மனு செய்தனர். ஓராண்டுக்கு முன்பு பிரீமியம் தொகையும் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை காப்பீட்டு அட்டை வழங்கப்படவில்லை. காப்பீட்டு அட்டை வேண்டி மனு செய்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. அதே போல் காப்பீட்டு அட்டைக்காக பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு, ஓராண்டு ஆகிறது. ஆனால் இன்னும் அட்டை வழங்கப்படவில்லை.
உரிய நடவடிக்கை தேவை
பல சங்கங்களுக்கும் இந்த நிலையே நீடிக்கிறது. மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாததால் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் கூட்டுறவு பணியாளர் கள் சிகிச்சை செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.