ஆர்.கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த டெய்லர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
அதிமுக இரண்டாக உடைந் ததைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தற்போது அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக சசிகலா ஆதரவாளரான டி.டி.வி. தினக ரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதர வாளரான மதுசூதனனும் நிறுத் தப்பட்டுள்ளனர். இதுபோக திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 8 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு சில அரசியல் கட்சியினர் பணம் கொடுத்து கவர முயற்சி செய்வதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒருவர் பணம் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்டவைகளில் வேகமாக பரவியது. இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி (42) என்பது தெரியவந்தது. டெய்லரான இவர் சசிகலா அணி யின் ஆதரவாளர் என கூறப்படுகி றது. இவர் மீது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்து போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர்.