சர்வதேச அளவில் விருதுகளை பெற்ற ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்ற பாலிவுட் படத்துக்கு மத்திய தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.
அலங்கிருதா ஸ்ரீவாஸ்தவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ பாலிவுட் படம், கடந்த ஆண்டில் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஆசிய எழுச்சிப் படம்’ என்ற விருதையும், மும்பை திரைப்பட விழாவில் பாலின சமத்துவம் என்ற பெயரிலும் விருதுகளை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை வெளியிடு வதற்காக அதன் தயாரிப்பு நிறுவனம் தணிக்கைக்கு அனுப் பியது. படத்தை பார்த்த தணிக் கைக் குழு அதை வெளியிடத் தடை விதித்து அதற்கான காரணத்தை கடிதம் வழியே படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ஷாவுக்கு அனுப்பியுள்ளது. அதில், “பெண்களின் வாழ்க்கையை மீறிய கற்பனையும், பாலினக் காட்சிகளும், ஒலிவழி ஆபாசமும், சமூகத்தின் ஒரு பிரிவினரை மனம் நோகச் செய்யும் விதமாக வும் இந்தப்படம் உள்ளது!’’ என்று கூறப்பட்டுள்ளது.
‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படம் ஒரு ஊரில் வசிக்கும் வெவ்வேறு வயதுடைய நான்கு பெண்களின் ரகசிய வாழ்க்கையைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.