பட்டுப்போன பழமைவாதங் களை ஒழிப்பதற்கு ஏதுவான கல்வியை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு சார்பில் ‘பட்டியல் இன மாணவர்களும் கல்வி வாய்ப்பு களும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு சென்னை எழும் பூரில் உள்ள இக்சா மையத்தில் நேற்று நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், முன் னாள் ஐஏஎஸ் அதிகாரி கிருத்து தாஸ் காந்தி, பெர்னார்ட் பாத்திமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் திருமாவளவன் பேசியதாவது:
கல்வித்துறை, பண்பாட்டுத் துறை என அனைத்தையும் மத்திய பாஜக அரசு காவிமய மாக்கி வருகிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிய திருவள்ளுவரை தலித் புலவர் என்று கூறுகின்றனர். அஞ்சல் நிலையங்களில் கங்கை நீரை விற்பனை செய்கின்றனர்.
அம்பேத்கர் மீது உண்மையி லேயே பாஜகவினருக்கு ஈடுபாடு இருந்திருந்தால், ‘இந்து மதத்தில் உள்ள சிக்கல்’ என்ற அம்பேத்கரின் நூலை பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைத்திருக்க வேண்டும். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்கி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எதையும் செய்யவில்லை.
கல்வியை காவிமயமாக்கும் பாஜகவின் முயற்சியை நாம் முறியடிக்க வேண்டும். பட்டப்படிப்பை தாண்டி அம்பேத்கர் எல்லாவற்றையும் கற்றறிந்தார். அதனால்தான் அவர் சமூகத்தை புதிய கோணத்திலிருந்து பார்த்து பல்வேறு கருத்துகளை தந்தார். எனவே, சமூகத்தில் இறுக்கமான, பட்டுப்போன பழமைவாதங்களை ஒழிப் பதற்கு ஏதுவான கல்வியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.