தமிழகம்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் விரைவில் கண்காணிப்பு கேமரா: ரயில்வே அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் இன்னும் ஒரு வாரத்தில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாதியை கொலை செய்ததாக கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்ட ராம்குமாரும் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, நீதிமன்றமும் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டது.

ஆனால், சுவாதி கொலை சம்பவம் நடந்து 10 மாதங்கள் ஆகியும் இன்னும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்படவில்லை. இது ரயில் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நுங்கம்பாக்கம் மட்டுமல்ல, அனைத்து புறநகர் ரயில் நிலை யங்களிலும் பாதுகாப்பு அம்சங் களைப் படிப்படியாக மேம் படுத்தி வருகிறோம். 82 ரயில் நிலையங்களில் 1,400 கண் காணிப்பு கேமிராக்கள் எங்கெல் லாம் பொருத்தலாம் என்பது குறித்து இடங்கள் தேர்வு செய்து, அதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டது.

தற்போது, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவதற் கான நிறுவனங்களும் தேர்வு செய்துள்ளோம்.

முதல்கட்டமாக நுங்கம்பாக்கத் தில் இன்னும் ஒரு வாரத்தில் மொத்தம் 16 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவுள்ளோம். இதேபோல், மற்ற ரயில் நிலையங்களிலும் நுழைவாயில், நடைமேடைகள், நடைமேம்பாலங்களில் என தேவையை பொருத்து 12 முதல் 32 இடங்கள் வரை கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT