தமிழகம்

யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் 24 பேர் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

யாழ்ப்பாணம் சிறையில் அடைக் கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 24 பேர் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய் யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் அனைவரும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டபோது, அவர்களது நீதிமன்றக் காவலை 3-வது முறையாக நவ. 7-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவர்கள் அனைவரும் யாழ்ப் பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், படகுகளுடன் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் 24 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் திங்கள்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங் கினர்.

இதுகுறித்து யாழ்ப்பாணத் திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி மூர்த்தி கூறியதாவது:

மீனவர்களின் உண்ணாவிரதம் குறித்து கொழும்பிலுள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கும், டெல்லி தலைமை அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களை விடுதலை செய்வது குறித்து கொழும்பிலுள்ள சிறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.ஒரு வாரத்துக்குள் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தூதரக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று, மீன வர்கள் நேற்று தங்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்’ என்றார்.

SCROLL FOR NEXT