மருத்துவத் துறைக்கு இந்த ஆண்டு ரூ.9,073 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய பசுமை கட்டிடக் கழகம் இணைந்து பசுமை மருத்துவமனைகள் குறித்த கருத் தரங்கை சென்னையில் நேற்று நடத்தின. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், கருத்தரங்கை தொடங்கி வைத்து, பசுமை மருத்துவ மனைகள் குறித்த புத்தகத்தை வெளி யிட்டார்.
சிறந்த முறையில் சிகிச்சை
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழக அரசு மருத்துவத்துறைக்கு இந்த ஆண்டு ரூ.9,073 கோடியை ஒதுக்கியுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தி யுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளை மையமாக வைத்து அவர்களின் உதவி யாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல் பட்டால்தான் பசுமையான மருத்துவ மனைகளை உருவாக்க முடியும். தமிழகத் தில் பல அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளன’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சிறப்புச் செயலாளர் பி.செந்தில்குமார், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய பசுமை கட்டிடக் கழகம் (சென்னை) தலைவர் ராகவேந்திரன், துணைத் தலைவர் அஜித்குமார் சோர்டியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.