தெற்கு ரயில்வே நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: ரயில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் வரும் 4-ம் தேதி சூலூர்பேட்டை நெல்லூர் பயணிகள் ரயில் (66031/66032) சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், அரக்கோணம் மார்க்கத்தில் பட்டாபிராம் திருநின்றவூர் இடையே ரயில்பாதை பராமரிப்பு பணிகள் வரும் 4, 6, 7, 8, 9, 10, 11-ம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதனால், மேற்கண்ட நாட்களில் கடற்கரையில் இருந்து அதிகாலை 1.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் விரைவு பாதையில் இயக்கப்படுகிறது. இதனால், பட்டாபிராம், நெமிலிச்சேரி, திருநின்றவூர், வேப்பம்பட்டு, செவ்வாபேட்டை, புட்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்.