மோட்டார் சைக்கிளில் தனியாளாக உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் புற்றுநோயில் இருந்து மீண்ட மத்தியப் பிரதேச இளைஞர்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரெவாவைச் சேர்ந்தவர் ஹர்தேஜ் பர்தேஷ் (26). 2013-ல் இவருக்கு கழுத்துப் பகுதியில் கட்டி வந்தது. சோதனையில் அது புற்றுநோய்க் கட்டி எனத் தெரியவந்தது.
அப்போது சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த ஹர்தேஜ், இறுதித் தேர்வுக்காக சிகிச்சை மேற்கொள்வதை தள்ளிப் போட் டார்.
தேர்வுகள் முடிந்திருந்தபோது, அவரது புற்றுநோய்க் கட்டி கடைசி நிலையை அடைந்திருந்தது. இத னால், அவருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண் டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஹைத ராபாத்தில் ரேடியோதெரபி சிகிச்சை பெற்றார். 6 மாத சிகிச்சைக்கு பிறகு, அவரை சோதனை செய் தபோது புற்றுநோய் முற்றிலும் குணமாகியிருந்தது.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ள ஹர்தேஜ், தற்போது நம்பிக்கை சவாரி (ரைடு ஆப் ஹோப்) என்ற பெயரில், நாடு முழுவதும் மோட்டார் சைக்கிளில் தனியாக சுற்றுப்பயணம் மேற் கொண்டு புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
மே 1 முதல் இதுவரை நான்கு மாநிலங்கள், 11 நகரங்களில் 6,500 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின்போது 1,200 புற்றுநோயாளிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், மதுரைக்கு நேற் று வந்த இவர், மீனாட்சிமிஷன் மருத்துவமனைக்குச் சென்ற புற்று நோயாளிகளிடம் உரையாடினார்.
அப்போது, அவர் தெரிவித்ததாவது: புகைப் பழக்கம், குடிப்பழக்கம் இல்லாத எனக்கு புற்றுநோய் வந்தது. இதனால் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். புற்றுநோயைக் கண்டு யாரும் பயப் படத் தேவையில்லை. ஒருபோதும் நம்பிக்கையை இழக் கக்கூடாது.
கண்டிப்பாக ரேடியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் பயணம் செய்தால் புற்றுநோயை வெல்ல முடியும் என்றார்.
முன்னதாக ஹர்தேஜ் கூறும் போது, ‘29 மாநிலங்களுக்கும் செல்ல உள்ளேன். மேலும் 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ளத் திட்ட மிட்டுள்ளேன்.
புற்றுநோயில் இருந்து முழு மையாக மீண்ட நிலையிலும், எனக்கு வேலைதர பல நிறுவனங்கள் மறுத்தன. அப்போது, புற்றுநோயால் கால்களை இழந்த ஒருவர் மாரத்தான் ஓடியது தொடர்பான கட்டுரையைப் படி க்க நேர்ந்தது. அப்போதுதான், என்னைப் போல புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான், இந்த மோட்டார் சைக்கிள் பயணம் என்றார்.
டாக்டர் கிருஷ்ணகுமார் ரத் தினம் கூறும்போது, ‘உலகில் 25 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 7 லட்சம் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு, புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கவே மருத்துவர்கள் பயந்தனர். ஆனால், தற்போது நவீன மருத்துவம் காரணமாக புற்றுநோயாளிகள் குணமடைவது அதிகரித்து வருகிறது என்றார். டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.