தமிழகம்

பங்காரு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஜெயேந்திரர், விஜயேந்திரர் பங்கேற்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மேல ராஜ வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மேலராஜ வீதியில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்துக்கு உட்பட்ட பங்காரு காமாட்சி அம்மன் கோயில் 230 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் 3 நிலை ராஜ கோபுரம் புதுப்பிக்கப்பட்டு, மேற் கில் புதிதாக ராஜகோபுரம் அமைக் கப்பட்டு, கோசாலை, யாகசாலை, மடப்பள்ளி, தரைத்தளம், மதில் சுவர் திருப்பணிகள் செய்யப் பட்டன.

இதையடுத்து, நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், காஞ்சி காமகோடி பீடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கோயில் செயல் அலுவலர் பெ.சங்கர், அறங்காவலர்கள் பி.கல்யாணராமன், ஜெ.பத்மநா பன், எஸ்.குஞ்சிதபாதம் மற்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT