தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை

செய்திப்பிரிவு

வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது நிலவுகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும்.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்திலிருந்து விலகிச் செல்லும் நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் உள்பகுதிகளில் வெப்ப நிலை இயல்பைவிட உயர்ந்து காணப்படும். மேலும் வெப்ப சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய கூடும்" என்றார்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான சென்னை, கடலூர், ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடலோர பிரதேசங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT