சென்னையில் நாளை (அக்டோபர் 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
ஆவடி பகுதி: ரயில்வே கார் ஷெட், செந்தில் நகர், போலீஸ் குடியிருப்பு, ஆவடி, சி.டி.எச்.சாலை, கன்னிகாபுரம், காந்திநகர், கவரப்பாளையம், டெலிபோன் எக்ஸேன்ஜ், சிவசக்தி நகர்.
பட்டாபிராம் பகுதி: சி.டி.எச். சாலை, ஸ்ரீதேவிநகர், ஐயப்பன் நகர், சேக்காடு, தண்டுரை, ராஜீவ்காந்தி நகர், அண்ணாநகர், சத்திரம், சாஸ்திரி நகர், பாபு நகர், சார்லஸ் நகர், காந்தி நகர், உழைப்பாளர் நகர், பி.டி.எம்.எஸ்., முத்தா புதுப்பேட்டை, மிட்னமல்லி, வள்ளலார் நகர், கோபாலபுரம், வெங்கட்டாபுரம், காமராஜபுரம் ஆகிய இடங்களில் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தால் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.