தமிழகம்

சென்னையில் ஊழல் எதிர்ப்பு கருத்தரங்குக்கு அனுமதி மறுப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் புதன்கிழமை மாலை நடைபெறவிருந்த ஊழல் எதிர்ப்பு கருத்தரங்குக்கு காவல் துறை கடைசி நேரத்தில் திடீரென அனுமதி மறுத்துள்ளது.

இன்று மாலை சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில் ஊழல் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறவிருந்தது. இதற்கு காவல்துறை கடைசி நேரத்தில் அனுமணி தர மறுத்துள்ளது.

இந்நிலையில், இதனை முன்னிறுத்தி இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

சந்திப்பில், தலைவர்கள் என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, பழ. நெடுமாறன், யு. ராமகிருஷ்ணன், பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT